Wednesday, 12 June 2013

எடிட்டருக்கு சில ஏடாகூடமான கேள்விகள் - 1

டியர் எடிட்,


(என்னடா இவன், எடிட்டர் அழகான சொல்லை அரைகுறையாக எடிட் என்று "எடிட்" செய்து சொல்கிறானே என்று பார்க்கிறீர்களா? நான் ஒரு அரைகுறை என்பதால் இப்படித்தான் சொல்வேன். அதுவுமின்றி இது ஒரு ஸ்டைல் கூட).


//நானும் ஜூனியர் எடிட்டரும் இதர ஸ்டால்களை ஒரு ரவுண்ட் விட்டோம். Cinebooks ஸ்டாலில் நிறைய collections இருந்த போதிலும், அவர்களது 'சூடான ' விலைகள் பாக்கெட்களில் ஓட்டை போடுவதை உணர முடிந்தது ! 'உங்களது விலைகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கு ஆர்ட் பேப்பரில் தமிழில் புத்தகங்கள் கிடைக்கின்றன' என்று நம் நண்பர்களில் பலரும் அவர்களிடம் சொல்லி வைத்திருந்ததை நானறிவேன் என்பதால் என்னை அறிமுகம் செய்து கொள்ளவில்லை. பத்தாயிரம் ரூபாய்களுக்கு பிரதிகளை வாங்கி விட்டு நடையைக் கட்டினேன்.// இங்கே எனக்கு ஒரு சந்தேகம் எடிட். என்னுடைய மனம் கவர்ந்த Cinebook நிறுவனம் தங்களது புத்தகங்களை விற்பனைக்காக வைத்து இருப்பது வாசகர்கள் அதனை வாங்கி படிப்பதற்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை. அப்படி இருக்க நீங்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு பிரதிகளை வாங்கி இருப்பது ஒரு புறம் மகிழ்வை அளித்தாலும் நீங்கள் அந்த புத்தகங்களை வாங்கி அவற்றை படித்து அதனை ஒரு வாசிப்பு அனுபவமாக மட்டுமில்லாமல் அதனை ஒரு வியாபாரம் (Business) ஆகவும் மாற்றி விடுகிறீர்கள்.


எப்படி என்றால் நாங்கள் எல்லாம் அந்த புத்தகங்களை வாங்கி படிப்பதோடு சரி, ஆனால் நீங்கள் அதனை வாங்கி படித்துவிட்டு அந்த கதையை புரிந்துகொண்டு அதனை தமிழில் வெளியிடுகிறீர்கள். இதனால் உங்களுக்கு மொழிபெயர்க்கும் செலவு குறைந்து விடுகிறது.


Cinebook போன்ற ஒரு சின்ன நிறுவனம் வேலை மெனக்கெட்டு பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஸ்டால் போடுவதற்கு ஏற்படும் செலவு என்ன என்பது பல ஊரிகளில் ஸ்டால் போடும் உங்களுக்கு தெரியாததல்லவே? அப்படி இருக்கு ஒரு சக பதிப்பாள நிறுவனத்திடம் இருந்து இப்படி செய்வது உங்களுக்கு எப்படி சாத்தியமாகியது?


இல்லை என்றால் பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கும்போதே நீங்கள் Cinebook நிறுவனத்துக்கு ஏதாவது Potential business loss compensation கொடுததீர்களா என்று அறிய ஆவல். இதனை நீங்கள் தெரிவிப்பது என்னை போன்ற உலக காமிக்ஸ் படித்து உன்னதம் அடையும் பலருக்கும் மனதிற்கு இதமூட்டும் ஒரு சங்கதியாக இருக்கும்.

இப்போதுதான் வேறு ஒரு விஷயத்தையும் கவனித்தேன். நம்முடைய ஆரம்ப கால முத்து காமிக்ஸ் கதாநாயகர்கள் அனைவரும் லண்டனில் இருந்து வந்த லயன் என்கிற காமிக்ஸ் இதழிலேயே வந்து இருந்தார்கள். அப்படி  ஒரு புகழ் பெற்ற காமிக்ஸ் இதழ் இருக்கும்போது நீங்கள் அதே பெயரில் ரப்படி ஒரு காமிக்ஸ் ஆரம்பிக்கலாம்?

இதனால் லண்டனில் இருந்து சென்னை வந்து காமிக்ஸ் வாங்கும் பயணிகள் லயன் காமிக்ஸ் என்றவுடன் "அடடே, நம்ம ஊர் லயன் காமிக்ஸ் இங்கேயும் கிடைக்கிறதே?" என்று நம்பி நமது தமிழ் லயன் காமிக்ஸை வாங்கி அதனால் லண்டன் லயன் காமிக்ஸின் brand equity குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதே?

நீங்கள் லண்டன் லயன் காமிக்ஸ் இடம் தமிழில் காமிக்ஸ் பெயர் வைப்பதற்கு உரிமையை கோரிப் பெற்றீர்களா என்பதை அறிய ஆவல். பதில் அளிப்பீர்களா எடிட்?

SunShine Library No 002 Lucky Spl Dated June 01st 2013 Cover

நமது சமீபத்திய வரவுகளான லக்கி ஸ்பெஷல் நன்றாக வந்து இருப்பதை கண்டு நான் சந்தோஷம் அடைந்தாலும் நீங்கள் செய்வது சரிதானா என்ற எண்ணம் மேலோங்குவதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.

  • புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தின் பெயரில் (சன் டிவி குழுமம்) ஏன் நீங்கள் காமிக்ஸ் ஆரம்பிக்க வேண்டும்?
  • அதுவும் அந்த நிறுவனத்தின் லோகோவைப்போலவே ஏன் சூரியன் நமது லோகோவில்?
  • நீங்கள் சன்ஷைன் லைப்ரரி ஆரம்பிப்பதற்கு முன்னாள் சன் குழுமத்திடம் அனுமதி பெற்றீர்களா எடிட்?
  • அப்படியானால் காமிக்ஸ் கிளாசிக்ஸ் வரிசை என்னவாயிற்று?
  • இனிமேல் அந்த வரிசையில் கதைகள் வராதா? அதற்காக சந்தா கட்டியவர்களின் கதி என்ன?

No comments:

Post a Comment