Wednesday 12 June 2013

வண்ணமும் எண்ணமும்

டியர் எடிட்,

இப்போதுதான் என்னுடைய சந்தா காப்பி  நிலவொளியில் ஒரு  நரபலி படித்தேன். முதலில் மூன்று புத்தகங்களை மாத்திரமே அனுப்பி இருந்தீர்கள். பின்னர் உங்கள் ஆபீசுக்கு போன் செய்து நியாபகப்படுத்தி இந்த புத்தகத்தை வரவழைக்க வேண்டியதாயிற்று.

Lion Muthu Comics SunShine Library No 03 Tex Willer Adventure

வண்ணத்தில் அஃபீஷியலாக நமது டெக்ஸ் வில்லர் கதையை முதல் முறையாக காணும் சந்தோஷம் ஒருபுறமிருக்க, புத்தகத்தின் அளவு மிகவும் சங்கடத்தை அளித்தது.

முன்பெல்லாம் நமது இதழுடன் தாய விளையாட்டு, டைம் டேபிள், வாழ்த்து அட்டை போன்றவற்றை இலவச இணைப்பாக அளித்த நீங்கள் இந்த இதழுடன் ஒரு பூத கண்ணாடியையும் அளித்து இருக்கலாம். அந்த அளவுக்கு எழுத்துக்கள் மிகவும் சிறியதாக என்னை போன்ற மத்திம வயதினருக்கு சிரமம் ஏற்படுத்தும் சங்கதி என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்குமா என்பது சந்தேகமே. அதனால் தான் இந்த பதிவு.

அதைப்போலவே ஓவியங்களையும் முழுமையாக ரசிக்க இயலவில்லை. தினமும் மூன்றுவேளை சாப்பாடு என்று சொல்லிவிட்டு அதனை ரெகுலராக செய்யும்வேலையில் ஒருநாள் ராஜபோக விருந்து என்று சொல்லிவிட்டு பாதி உணவு பரிமாறியது போலிருந்தது இந்த வண்ண டெக்ஸ் வில்லர் இதழ்.

தயவு செய்து இத்தாலியில் வரும் அதே அளவில் வெளியிடுங்கள், அப்போதுதான் அந்த ஓவியங்களை ரசிக்க முடியும். A4 சைஸ் கதைகளை பாக்கெட் சைசில் வெளியிட்ட காலங்களை கடந்து உலக தரத்தில் காமிக்ஸ் வெளியிட ஆரம்பிக்கும் முயற்சியில் இரண்டு அடிகள் முன்னேறி (இந்த புத்தகத்தின் மூலம்) இருபது அடிகள் பின் தங்கி விட்டோம்.

பி.கு: இந்த புத்தகத்தை இத்தாலியில் இருக்கும் போனெல்லி நிறுவனத்தினர் பார்த்து விட்டார்களா? அவர்களது கருத்தை அறிய அவா.

No comments:

Post a Comment