Sunday 21 July 2013

சொல்லுங்க எடி, சொல்லுங்க

ரெபஃரன்ஸ் பதிவு: காசு ....... பணம் .......... துட்டு ....... Money ......money !

Lion comic con

டியர் எடிட்,
(என்னடா இவன், எடிட்டர் அழகான சொல்லை அரைகுறையாக எடிட் என்று "எடிட்" செய்து சொல்கிறானே என்று பார்க்கிறீர்களா? நான் ஒரு அரைகுறை என்பதால் இப்படித்தான் சொல்வேன். அதுவுமின்றி இது ஒரு ஸ்டைல் கூட).

//நானும் ஜூனியர் எடிட்டரும் இதர ஸ்டால்களை ஒரு ரவுண்ட் விட்டோம். Cinebooks ஸ்டாலில் நிறைய collections இருந்த போதிலும், அவர்களது 'சூடான ' விலைகள் பாக்கெட்களில் ஓட்டை போடுவதை உணர முடிந்தது ! 'உங்களது விலைகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கு ஆர்ட் பேப்பரில் தமிழில் புத்தகங்கள் கிடைக்கின்றன' என்று நம் நண்பர்களில் பலரும் அவர்களிடம் சொல்லி வைத்திருந்ததை நானறிவேன் என்பதால் என்னை அறிமுகம் செய்து கொள்ளவில்லை. பத்தாயிரம் ரூபாய்களுக்கு பிரதிகளை வாங்கி விட்டு நடையைக் கட்டினேன்.//


இங்கே எனக்கு ஒரு சந்தேகம் எடிட். என்னுடைய மனம் கவர்ந்த Cinebook நிறுவனம் தங்களது புத்தகங்களை விற்பனைக்காக வைத்து இருப்பது வாசகர்கள் அதனை வாங்கி படிப்பதற்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை. அப்படி இருக்க நீங்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு பிரதிகளை வாங்கி இருப்பது ஒரு புறம் மகிழ்வை அளித்தாலும் நீங்கள் அந்த புத்தகங்களை வாங்கி அவற்றை படித்து அதனை ஒரு வாசிப்பு அனுபவமாக மட்டுமில்லாமல் அதனை ஒரு வியாபாரம் (Business) ஆகவும் மாற்றி விடுகிறீர்கள்.

எப்படி என்றால் நாங்கள் எல்லாம் அந்த புத்தகங்களை வாங்கி படிப்பதோடு சரி, ஆனால் நீங்கள் அதனை வாங்கி படித்துவிட்டு அந்த கதையை புரிந்துகொண்டு அதனை தமிழில் வெளியிடுகிறீர்கள். இதனால் உங்களுக்கு மொழிபெயர்க்கும் செலவு குறைந்து விடுகிறது.

Cinebook போன்ற ஒரு சின்ன நிறுவனம் வேலை மெனக்கெட்டு பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஸ்டால் போடுவதற்கு ஏற்படும் செலவு என்ன என்பது பல ஊரிகளில் ஸ்டால் போடும் உங்களுக்கு தெரியாததல்லவே? அப்படி இருக்கு ஒரு சக பதிப்பால நிறுவனத்திடம் இருந்து இப்படி செய்வது உங்களுக்கு எப்படி சாத்தியமாகியது?

இல்லை என்றால் பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கும்போதே நீங்கள் Cinebook நிறுவனத்துக்கு ஏதாவது Potential business loss compensation கொடுததீர்களா என்று அறிய ஆவல். இதனை நீங்கள் தெரிவிப்பது என்னை போன்ற உலக காமிக்ஸ் படித்து உன்னதம் அடையும் பலருக்கும் மனதிற்கு இதமூட்டும் ஒரு சங்கதியாக இருக்கும்.

Lion 0673 1965-02-27_Page_01

டியர் எடிட்,

இப்போதுதான் வேறு ஒரு விஷயத்தையும் கவனித்தேன். நம்முடைய ஆரம்ப கால முத்து காமிக்ஸ் கதாநாயகர்கள் அனைவரும் லண்டனில் இருந்து வந்த லயன் என்கிற காமிக்ஸ் இதழிலேயே வந்து இருந்தார்கள்.

அப்படி ஒரு புகழ் பெற்ற காமிக்ஸ் இதழ் இருக்கும்போது நீங்கள் அதே பெயரில் ரப்படி ஒரு காமிக்ஸ் ஆரம்பிக்கலாம்? இதனால் லண்டனில் இருந்து சென்னை வந்து காமிக்ஸ் வாங்கும் பயணிகள் லயன் காமிக்ஸ் என்றவுடன் "அடடே, நம்ம ஊர் லயன் காமிக்ஸ் இங்கேயும் கிடைக்கிறதே?" என்று நம்பி நமது தமிழ் லயன் காமிக்ஸை வாங்கி அதனால் லண்டன் லயன் காமிக்ஸின் brand equity குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதே?

நீங்கள் லண்டன் லயன் காமிக்ஸ் இடம் தமிழில் காமிக்ஸ் பெயர் வைப்பதற்கு உரிமையை கோரிப் பெற்றீர்களா என்பதை அறிய ஆவல். பதில் அளிப்பீர்களா எடிட்?

SSL Logo

டியர் எடிட்,

நமது சமீபத்திய வரவுகளான லக்கி ஸ்பெஷல் நன்றாக வந்து இருப்பதை கண்டு நான் சந்தோஷம் அடைந்தாலும் நீங்கள் செய்வது சரிதானா என்ற எண்ணம் மேலோங்குவதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.


  • புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தின் பெயரில் (சன் டிவி குழுமம்) ஏன் நீங்கள் காமிக்ஸ் ஆரம்பிக்க வேண்டும்?
  • அதுவும் அந்த நிறுவனத்தின் லோகோவைப்போலவே ஏன் சூரியன் நமது லோகோவில்?
  • நீங்கள் சன்ஷைன் லைப்ரரி ஆரம்பிப்பதற்கு முன்னாள் சன் குழுமத்திடம் அனுமதி பெற்றீர்களா எடிட்?
  • அப்படியானால் காமிக்ஸ் கிளாசிக்ஸ் வரிசை என்னவாயிற்று? இனிமேல் அந்த வரிசையில் கதைகள் வராதா?
  • அதற்காக சந்தா கட்டியவர்களின் கதி என்ன?

சொல்லுங்க எடி, சொல்லுங்க.

Wednesday 12 June 2013

வண்ணமும் எண்ணமும்

டியர் எடிட்,

இப்போதுதான் என்னுடைய சந்தா காப்பி  நிலவொளியில் ஒரு  நரபலி படித்தேன். முதலில் மூன்று புத்தகங்களை மாத்திரமே அனுப்பி இருந்தீர்கள். பின்னர் உங்கள் ஆபீசுக்கு போன் செய்து நியாபகப்படுத்தி இந்த புத்தகத்தை வரவழைக்க வேண்டியதாயிற்று.

Lion Muthu Comics SunShine Library No 03 Tex Willer Adventure

வண்ணத்தில் அஃபீஷியலாக நமது டெக்ஸ் வில்லர் கதையை முதல் முறையாக காணும் சந்தோஷம் ஒருபுறமிருக்க, புத்தகத்தின் அளவு மிகவும் சங்கடத்தை அளித்தது.

முன்பெல்லாம் நமது இதழுடன் தாய விளையாட்டு, டைம் டேபிள், வாழ்த்து அட்டை போன்றவற்றை இலவச இணைப்பாக அளித்த நீங்கள் இந்த இதழுடன் ஒரு பூத கண்ணாடியையும் அளித்து இருக்கலாம். அந்த அளவுக்கு எழுத்துக்கள் மிகவும் சிறியதாக என்னை போன்ற மத்திம வயதினருக்கு சிரமம் ஏற்படுத்தும் சங்கதி என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்குமா என்பது சந்தேகமே. அதனால் தான் இந்த பதிவு.

அதைப்போலவே ஓவியங்களையும் முழுமையாக ரசிக்க இயலவில்லை. தினமும் மூன்றுவேளை சாப்பாடு என்று சொல்லிவிட்டு அதனை ரெகுலராக செய்யும்வேலையில் ஒருநாள் ராஜபோக விருந்து என்று சொல்லிவிட்டு பாதி உணவு பரிமாறியது போலிருந்தது இந்த வண்ண டெக்ஸ் வில்லர் இதழ்.

தயவு செய்து இத்தாலியில் வரும் அதே அளவில் வெளியிடுங்கள், அப்போதுதான் அந்த ஓவியங்களை ரசிக்க முடியும். A4 சைஸ் கதைகளை பாக்கெட் சைசில் வெளியிட்ட காலங்களை கடந்து உலக தரத்தில் காமிக்ஸ் வெளியிட ஆரம்பிக்கும் முயற்சியில் இரண்டு அடிகள் முன்னேறி (இந்த புத்தகத்தின் மூலம்) இருபது அடிகள் பின் தங்கி விட்டோம்.

பி.கு: இந்த புத்தகத்தை இத்தாலியில் இருக்கும் போனெல்லி நிறுவனத்தினர் பார்த்து விட்டார்களா? அவர்களது கருத்தை அறிய அவா.

எடிட்டருக்கு சில ஏடாகூடமான கேள்விகள் - 1

டியர் எடிட்,


(என்னடா இவன், எடிட்டர் அழகான சொல்லை அரைகுறையாக எடிட் என்று "எடிட்" செய்து சொல்கிறானே என்று பார்க்கிறீர்களா? நான் ஒரு அரைகுறை என்பதால் இப்படித்தான் சொல்வேன். அதுவுமின்றி இது ஒரு ஸ்டைல் கூட).


//நானும் ஜூனியர் எடிட்டரும் இதர ஸ்டால்களை ஒரு ரவுண்ட் விட்டோம். Cinebooks ஸ்டாலில் நிறைய collections இருந்த போதிலும், அவர்களது 'சூடான ' விலைகள் பாக்கெட்களில் ஓட்டை போடுவதை உணர முடிந்தது ! 'உங்களது விலைகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கு ஆர்ட் பேப்பரில் தமிழில் புத்தகங்கள் கிடைக்கின்றன' என்று நம் நண்பர்களில் பலரும் அவர்களிடம் சொல்லி வைத்திருந்ததை நானறிவேன் என்பதால் என்னை அறிமுகம் செய்து கொள்ளவில்லை. பத்தாயிரம் ரூபாய்களுக்கு பிரதிகளை வாங்கி விட்டு நடையைக் கட்டினேன்.// இங்கே எனக்கு ஒரு சந்தேகம் எடிட். என்னுடைய மனம் கவர்ந்த Cinebook நிறுவனம் தங்களது புத்தகங்களை விற்பனைக்காக வைத்து இருப்பது வாசகர்கள் அதனை வாங்கி படிப்பதற்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை. அப்படி இருக்க நீங்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு பிரதிகளை வாங்கி இருப்பது ஒரு புறம் மகிழ்வை அளித்தாலும் நீங்கள் அந்த புத்தகங்களை வாங்கி அவற்றை படித்து அதனை ஒரு வாசிப்பு அனுபவமாக மட்டுமில்லாமல் அதனை ஒரு வியாபாரம் (Business) ஆகவும் மாற்றி விடுகிறீர்கள்.


எப்படி என்றால் நாங்கள் எல்லாம் அந்த புத்தகங்களை வாங்கி படிப்பதோடு சரி, ஆனால் நீங்கள் அதனை வாங்கி படித்துவிட்டு அந்த கதையை புரிந்துகொண்டு அதனை தமிழில் வெளியிடுகிறீர்கள். இதனால் உங்களுக்கு மொழிபெயர்க்கும் செலவு குறைந்து விடுகிறது.


Cinebook போன்ற ஒரு சின்ன நிறுவனம் வேலை மெனக்கெட்டு பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஸ்டால் போடுவதற்கு ஏற்படும் செலவு என்ன என்பது பல ஊரிகளில் ஸ்டால் போடும் உங்களுக்கு தெரியாததல்லவே? அப்படி இருக்கு ஒரு சக பதிப்பாள நிறுவனத்திடம் இருந்து இப்படி செய்வது உங்களுக்கு எப்படி சாத்தியமாகியது?


இல்லை என்றால் பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கும்போதே நீங்கள் Cinebook நிறுவனத்துக்கு ஏதாவது Potential business loss compensation கொடுததீர்களா என்று அறிய ஆவல். இதனை நீங்கள் தெரிவிப்பது என்னை போன்ற உலக காமிக்ஸ் படித்து உன்னதம் அடையும் பலருக்கும் மனதிற்கு இதமூட்டும் ஒரு சங்கதியாக இருக்கும்.

இப்போதுதான் வேறு ஒரு விஷயத்தையும் கவனித்தேன். நம்முடைய ஆரம்ப கால முத்து காமிக்ஸ் கதாநாயகர்கள் அனைவரும் லண்டனில் இருந்து வந்த லயன் என்கிற காமிக்ஸ் இதழிலேயே வந்து இருந்தார்கள். அப்படி  ஒரு புகழ் பெற்ற காமிக்ஸ் இதழ் இருக்கும்போது நீங்கள் அதே பெயரில் ரப்படி ஒரு காமிக்ஸ் ஆரம்பிக்கலாம்?

இதனால் லண்டனில் இருந்து சென்னை வந்து காமிக்ஸ் வாங்கும் பயணிகள் லயன் காமிக்ஸ் என்றவுடன் "அடடே, நம்ம ஊர் லயன் காமிக்ஸ் இங்கேயும் கிடைக்கிறதே?" என்று நம்பி நமது தமிழ் லயன் காமிக்ஸை வாங்கி அதனால் லண்டன் லயன் காமிக்ஸின் brand equity குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதே?

நீங்கள் லண்டன் லயன் காமிக்ஸ் இடம் தமிழில் காமிக்ஸ் பெயர் வைப்பதற்கு உரிமையை கோரிப் பெற்றீர்களா என்பதை அறிய ஆவல். பதில் அளிப்பீர்களா எடிட்?

SunShine Library No 002 Lucky Spl Dated June 01st 2013 Cover

நமது சமீபத்திய வரவுகளான லக்கி ஸ்பெஷல் நன்றாக வந்து இருப்பதை கண்டு நான் சந்தோஷம் அடைந்தாலும் நீங்கள் செய்வது சரிதானா என்ற எண்ணம் மேலோங்குவதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.

  • புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தின் பெயரில் (சன் டிவி குழுமம்) ஏன் நீங்கள் காமிக்ஸ் ஆரம்பிக்க வேண்டும்?
  • அதுவும் அந்த நிறுவனத்தின் லோகோவைப்போலவே ஏன் சூரியன் நமது லோகோவில்?
  • நீங்கள் சன்ஷைன் லைப்ரரி ஆரம்பிப்பதற்கு முன்னாள் சன் குழுமத்திடம் அனுமதி பெற்றீர்களா எடிட்?
  • அப்படியானால் காமிக்ஸ் கிளாசிக்ஸ் வரிசை என்னவாயிற்று?
  • இனிமேல் அந்த வரிசையில் கதைகள் வராதா? அதற்காக சந்தா கட்டியவர்களின் கதி என்ன?